[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சிவாவுக்கு திரும்பவும் நயன்தாராதான் ஜோடி

it-s-official-nayanthara-and-sivakarthikeyan-join-hands-once-again

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார்.

சில தினங்கள் முன்பு எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்தப் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முழுக்க முழுக்க காமெடி படமாக இதன்  திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

காமெடி கதைகளை இயக்குவதில் தனிப் பாணியை கையாண்டு வரும் ராஜேஷூக்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்தப் படத்தில் சிவாவிற்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்திருந்தது. பலரும் நயன் நடிக்கலாம் என எதிர்பார்த்தனர். பலரின் கணிப்பைப் போல் இந்தப் படத்தில் சிவாவிற்கு ஜோடியாக நயன்தராவே ஜோடியாக உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு #எஸ்கே13 ஹேஷ் டேக் சமூக வலைத்தளத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ‘வேலைக்காரன்’ படத்தில் சிவா உடன் இணைந்து நடித்திருந்தார் நயன். ஆக, இந்த ஜோடி இப்போது இரண்டாவது முறையாக ஜோடி சேர உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close