[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.

ஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா மகிழ்ச்சி 

suriya-s-thaana-serntha-kootam-press-meet

7 வருடத்திற்குப் பிறகு ஒரு பண்டிகை நாளில் என் படம் வெளியாகிறது என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டுடியோ கீரீன் கே.ஏ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம். இதன் செய்தியாளர் சந்திப்பு  நடைபெற்றது. அதில் சூர்யா, கே.ஏ.ஞானவேல் ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் சூர்யா, “ நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி அவர்களுக்கும், கமல் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. எப்படி எனக்கு ஒவ்வொரு டைரக்டர் முக்கியமோ ஒவ்வொரு தயாரிப்பாளரும் முக்கியமோ, அதைபோல என்னுடன் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் முக்கியம். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இந்தக் கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக ஹரியிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. படத்தில் உள்ள அணைத்து பாடல்களும் மிக சிறப்பாக அமைத்துள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று என் படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற அறிவிப்பு அட்டை எங்கள் படத்தில் வராது. இயக்குநர் அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்” என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “ நான் ஸ்பெஷல் 26 படத்தின் உரிமையை வாங்கி, அந்தப் படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ படத்தை பார்த்துதான் வளர்ந்தேன். அந்தப் படம்தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். மேடையில் கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்தி கூறினார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் இருக்கிறீர்கள். ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலை பெற்றவர். அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.” என்றார்.


 

போட்டோ கேலரி

1 of 9

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close