விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்ததாக ஃப்ளிம்ஃபேர் பத்திரிக்கை கூறியுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில், மிக நெருங்கிய குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டதாகவும் அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இன்று இரவு 8:00 மணிக்கு விராட், அனுஷ்கா இருவரும் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் ஃப்ளிம்ஃபேர் கூறியுள்ளது.
கோலியும், அனுஷ்காவும் 2013 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். விராட் கோலி வெளிநாடுகளுக்கு விளையாட செல்லும் போதெல்லாம் அனுஷ்காவை அழைத்துச் செல்வார். இந்தியாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர். இடையில் 2015 ஆம் ஆண்டு சிறிது காலம் பிரிந்து இருந்தாலும் மீண்டும் காதல் அவர்களை இணைத்தது. இந்நிலையில் இன்று அவர்கள் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்