[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட விக்ரம்..!

vikram-jolly-video-to-his-fans

மகள் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நடிகர் விக்ரம் நன்றி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் கடந்த 30-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில்  திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதுமட்டுமில்லாமல் தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி, வாழ்த்துச் சொல்ல அனுமதித்தார் விக்ரம். இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து, வரிசையில் நின்று மணமக்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்தனர்.

இந்நிலையில் மணமக்களை வாழ்த்திய ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை விக்ரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவ்வளவு மழை வெள்ளத்திலும் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள். உங்களது அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close