[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

எனது அலுவலகத்தில் நடந்தது வருமானவரி சோதனை:விஷால் விளக்கம் 

income-tax-raid-vishal-interview

எனது அலுவலகத்தில் நடந்தது வருமான வரி சோதனை என நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். 
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபில்ம்பேக்ட்ரியில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் இன்று சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சார்பில் உடனே இதற்கு மறுப்பு வெளியானது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் சந்தித்தார். அப்போது அவர் “என் அலுவலகத்தில் ஜிஎஸ்டி ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தவில்லை. வருமான வரித்துறையினர் சோதனைதான் நடத்தினர்”என்றார். மேலும் அவர் “ இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதா என தெரியவில்லை. என்னுடைய கணக்கு வழக்குகள் சரியாகவே உள்ளன. இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் அப்படி இருந்தால் அதையும் சந்திக்கவும் நான் தயாராகவே இருக்கிறேன்.”என்றார். 

இந்த நிலையில் வருமானவரித் துறை விஷாலை 27ஆம் தேதி ஆஜராகும் படி சம்மன் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 51 லட்சம் ரூபாய் வரி செலுத்துவது சம்பந்தமாக அவர் விளக்கம் அளிக்க உள்ளார்.


 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close