[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

சிவாஜியின் ஹாலிவுட் பயணம்..

sivaji-ganesan-in-hollywood

மறைந்த அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியின் மனதை நடிப்பால் கவர்ந்தவர் நடிகர் திலகம். அவர் அழைப்பின் பேரில் 1962ல் அமெரிக்கா சென்ற சிவாஜிக்கு, ஒரு நாள் நயாகரா மேயர் பதவி உள்பட ஏக மரியாதை.

ஹாலிவுட்டிற்கு சென்ற போதும் அவரை அங்கிருந்த நடிகர்கள் அவ்வளவு சந்தோஷமாக வரவேற்றார்கள். பல முன்னணி நடிகர்கள் ஒன்று திரண்டு நம் நடிகர் திலகத்துடன் பெருமையுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்.

இங்கே படத்தில்…நிற்பவர்கள்…ஜேம்ஸ் கார்னர் (1950களில் மாவரிக் சீரியஸ்களில் வெளுத்து கட்டியவர்) ஜேக் லெம்மோன்( ஆஸ்கார் உள்பட பல விருதுகளை குவித்தவர்) கார்ல்ட்ன் ஹெஸ்டன்( தி டென்கமான்மெண்ட்ஸ், பென் ஹர் போன்ற பிரமாண்ட படங்களின் நாயகன்)

உட்கார்ந்திருப்பவர்கள்,,,ஜார்ஜ் சேன்ட்லியர்( சிவாஜி பிறக்கும்போது ஹாலிவுட்டுக்கு வந்த பழம்பெரும் நடிகர்) வால்டர் பிட்ஜியோன் (1920களில் ஊமைபடங்கள் தொடங்கி 50ஆண்டுகள் ஹாலிவுட்டில் வலம் வந்தவர்)

பின்குறிப்பு.. இந்த அமெரிக்க பயணத்திற்கு போவதற்கு முன்பாக பனிரெண்டே நாட்களில் நடிகர் திலகம் நடித்துமுடித்து கொடுத்தபடம்தான் மூன்று வேடங்களில் கலக்கிய பி.ஆர்.பந்துவின் பலே பாண்டியா..

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close