[X] Close

9 கிலோ எடை குறைப்பு; ஆனாலும் உயர்தர உபகரணங்கள்: அசத்தலான அப்டேட்டில் கேடிஎம் பைக்!

டெக்னாலஜி

KTM-1290-Super-Duke-RR-breaks-cover-with-1-1-power-to-weight

180 கிலோ எடை கொண்ட புதிய கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர்.ஆர் பைக்கில் 9 கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ளது.


Advertisement

வி ட்வின் என்ஜினை உள்ளடக்கிய கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர்.ஆர் பைக் 1301 சிசி கொண்டது. 180 பிஎச்பி (brake horsepower) அளவு பவர் கொண்ட இதன் என்ஜின் 140 நியூட்டன் மீட்டர் டார்க் கொண்டது. 180 கிலோ எடை கொண்ட இந்த பைக் முந்தைய சூப்பர் டியூக் ஆர் மாடலை விட 9 கிலோ எடை குறைவானது. பைக்கில் எடைக்குறைப்பு இருந்தாலும், உயர்தர உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

image


Advertisement

டயரில் 1.5 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. அதே போல லித்தியம் - அயன் பேட்டரி பொருத்தப்பட்டதன் மூலம் 2.5 கிலோ எடை குறைக்கப்பட்டது. இதனை தவிர்த்து பைக்கின் புற வடிவமைப்பிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது மூலம் பைக்கின் எடை குறைக்கப்பட்டுள்ளது.

image

சஸ்பென்ஷன் உபகரணங்களை பொருத்தவரை நெகிழ்வுதன்மை கொண்ட WP Apex Pro 7548 ஃபோர்க் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் WP Apex Pro 7117 இணைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி Apex Pro 7746 பின் சக்கரம் சார்ந்த சஸ்பென்ஷனை கவனித்துக்கொள்கிறது. 


Advertisement

புகைப்பட உதவி : டைம்ஸ் நவ்


Advertisement

Advertisement
[X] Close