[X] Close

  பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

சுடச்சுட

BJP-candidate-list-likely-to-be-released-today

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, 20 தொகுதிகளில் களம் காண்கிறது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஜெ.பி.நட்டா தலைமையில் இன்று மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ள மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநிலப் பொறுப்பாளர்களின் ஆலோசனைக்குப்பின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close