Published : 20,Jul 2017 05:14 AM
2 மாதத்தில் 729 கொலைகள்: உ.பியில் அதிர்ச்சி

உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் தலைமையிலான 2 மாத கால ஆட்சியில் 729 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யோகி அரசு, பதவியேற்ற முதல் வாரத்திலேயே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தனி படை அமைத்து அமர்க்களப்படுத்தியது. ஆனால் ஆட்சி அமைத்த மார்ச் 15 முதல் மே 9 வரை, 729 கொலைகள், 803 பாலியல் வன்கொடுமை, 2682 ஆள்கடத்தல் சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளன. உ.பி வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் இவ்வளவு குற்ற வழக்குகள் பதியப்பட்டதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.