[X] Close

தூத்துக்குடி வந்தார் ராகுல் காந்தி.. மீனவ மக்களுடன் கலந்துரையாட ஏற்பாடு!

தமிழ்நாடு,தேர்தல் களம்

Rahul-Gandhi-arrives-in-Thoothukudi-to-discuss-with-fishing-community

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காகப் பிரசாரம் செய்வதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார் ராகுல்காந்தி.


Advertisement

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தடைந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தமிழகத்தில் 2-வதுகட்டமாக ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.  தூத்துக்குடி மீனவ மக்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே பொதுமக்களிடையே ராகுல் காந்தி பேசுகிறார். அதன்பிறகு கடற்கரைச்சாலை வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதிக்கு சென்று உப்பளத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து முக்காணி, ஆத்தூர், சாகுபுரம்,குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு வருகிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டுபேசுகிறார். பின்னர் நாசரேத் வழியாக சாத்தான்குளம் செல்லும் அவர் காமராஜர் சிலை அருகே உரையாற்றுகிறார்.

அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சென்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close