Published : 08,Feb 2021 12:37 PM

"எப்பேர்பட்ட திறமை"-வாஷிங்டன் சுந்தரை வாழ்த்திய கிரிக்கெட் உலகம்!

Indian-cricket-fraternity-hails-Washington-Sundar-for-his-stunning-85-in-1st-innings

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்களை எடுத்தார்.

வாஷிங்டன் சுந்தரின் இந்த அற்புதமான பேட்டிங்கிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இப்படிதான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பிர்ஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா விக்கெட்டை இழந்து தடுமாறியபோது வாஷிங்டன் சுந்தரும் ஷர்துல் தாக்கூரும் இணைந்து இந்திய அணியை மீட்டனர். வாஷிங்டன் சுந்தருக்கு அது முதல் டெஸ்ட் போட்டி என்றாலும் அரை சதமடித்தார்.

image

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 321 ரன்கள் நேற்று பின்தங்கியது. இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்தார். அஸ்வின் அவருக்கு உறுதுணையாக விளையாடினார். ஆனால் 31 ரன்களில் அஸ்வின் அவுட்டானது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதன் பின்பு வந்த ஷபாஸ் நதீம், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் மட்டும் அற்புதமாக விளையாடிய இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார்.

image

இதனை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டியுள்ளனர், இது குறித்து சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் "அவரால் சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டையும் பிரமாதமாக செய்ய முடியும். எப்பேர்பட்ட திறமையுள்ளவர் வாஷிங்டன் சுந்தர்" என பதிவிட்டு இருக்கிறார். இதேபோ டபுள்யூ வி ராமன் "தன்னால் எப்போதும் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என நிரூபித்துவிட்டார் வாஷிங்டன் சுந்தர்" எனத் தெரிவித்துள்ளார். இதுபோல பல கிரிக்கெட் வர்ணனையாளர்களும் அவரை வாழ்த்தி இருக்கின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்