[X] Close

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வரலாற்று வெற்றியை நோக்கி ஜிம்பாப்வே

Sikandar-Raza-puts-Zimbabwe-on-course-for-first-Test-win-over-Sri-Lanka

கொழும்பு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற ஜிம்பாப்வே அணி 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.


Advertisement

மூன்றாம் நாள் ஸ்கோரான 252 ரன்களுடன் நான்காவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. 97 ரன்களுடன் களமிறங்கிய சிக்கந்தர் ராசா, 160 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 127 ரன்களில் ரங்கனா ஹெராத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 107.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 377 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிக்கந்தர் ராசாவுடன் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்த மால்கம் வாலெர் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். க்ரீமர் 48 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் இலங்கை அணி வெற்றிபெற 388 ரன்களை ஜிம்பாப்வே அணி இலக்காக நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் ரங்கனா ஹெராத், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. இதையடுத்து டெஸ்ட் போட்டியையும் வெல்லும் முனைப்பில் விளையாடி வருகிறது. 
 


Advertisement

Advertisement
[X] Close