Published : 07,Jan 2021 03:40 PM
சமூகப் பொறுப்புடன் நடந்துகொண்ட சிறார்கள் - நெகிழ்ச்சி வீடியோ!

எப்போதும் பெரியவர்களிடமிருந்து தான் சிறியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் யாரிடமிருந்தாலும் அவற்றை நாம் பெற்றுக் கொள்வதும் கற்றுக் கொள்வதுமே நல்ல முன்நகர்வு. அவ்வகையில் சமூகவலைதளங்களில் தற்போது பரவிவரும் வீடியோ ஒன்று பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.
மழையின் காரணமாக சாலையோர பள்ளத்தில் தேங்கிக்கிடக்கும் நீரை ஒரு சிறுமியும், சிறுவனும் சேர்ந்து விபத்து ஏற்பட்டுவிடாமல் தடுக்க அவற்றை மூடுகின்றனர். அருகில் இருக்கும் உடைந்த இரும்புத் தடுப்பு ஒன்றை எடுத்து பள்ளத்தின் மேல் பாதுகாப்பாக மூடுகின்றனர். சிறுமியும் சிறுவனும் அக்கா, தம்பியாக இருக்கலாம் என்றே தெரிகிறது. சிறுமி பள்ளத்தை மூடும் போது உடனிருக்கும் சிறுவன் அச்சிறுமி மழையில் நனைந்து விடாதபடி குடைபிடிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
சிறுமியும் சிறுவனும் செய்யும் இந்தச் செயல் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. எதிர்கால தலைமுறையின் மீது நம்பிக்கை தரும் ஒன்றாக இந்த வீடியோ உள்ளது.
?????#childrenpic.twitter.com/NoGUoOYgHb
— Prasanna Vs (@PrasannaVs7) January 7, 2021