[X] Close

'நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு துரோகம் - ஸ்டாலின்

Stalin-tell-about-NEET

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசிடமும், நீதிமன்றத்திலும் தமிழ்நாட்டின் நியாயத்தை எடுத்துக்கூற தமிழக அரசு தவறிவிட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒரே நாடு ஒரே தேர்வு' என்ற வல்லாதிக்க எண்ணத்தோடு திணிக்கப்பட்ட நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு இழைத்த அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்க வேண்டிய அரசு, அதற்கு எதிராக ஒரு முணுமுணுப்பைக் கூட காட்ட அஞ்சுவதாக சாடியுள்ளார். மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில் அரசு வெளியிட்ட அரசாணை சட்டவிரோதமானது எனக் கூறி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இப்பிரச்னையில், மாநில அரசு, பொருத்தமான சட்ட நிபுணர்களைக் கொண்டு உரிய வகையில் வாதாடியதா? என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, நீட் தேர்வு சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close