[X] Close

இந்தியா - பிரிட்டன் இடையே ஜனவரி 6 முதல் விமான சேவை

இந்தியா

India---UK-flight-from-January-6

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6 முதல் விமான சேவை தொடங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவிய நிலையில், டிசம்பர் 31-ஆம் தேதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளுக்கும் மத்திய அரசு தடைவிதித்தது. தொடர்ந்து அந்த தடை உத்தரவை ஜனவரி 7ம் தேதி வரை மேலும் நீட்டித்தது மத்திய அரசு.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6 முதல் விமான சேவை தொடங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு ஜனவரி 8 முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் இந்தியா பிரிட்டன் இடையே வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படும் எனவும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் தெரிவித்தார். மேலும், இந்த ஏற்பாடு ஜனவரி 23 வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close