[X] Close

'அண்ணாத்த' ஷூட்டிங்: ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த்!

சினிமா

Rajinikanth-leaves-Hyderabad-to-join-Annathe-shooting

'அண்ணாத்த' திரைப்பட படிப்பிடிப்பில் கலந்துக்கொள்வதற்காக ஹைதராபாத் புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.


Advertisement

2019 ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ’விஸ்வாசம்’ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால், தனது அடுத்தப் படத்தினை இயக்கும் வாய்ப்பை ரஜினி ’சிறுத்தை’ சிவாவுக்கு கொடுத்துள்ளார். ரஜினியின் 168 வது படமான ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.

image


Advertisement

இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் 15 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது என்பதை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளான நேற்று இயக்குநர் சிவா வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருந்தார் அதில் "ரசிகர்களின் வாழ்த்துகளுடன் ஆதரவுடன் இறைவனின் நல்லாசியுடன் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை துவங்குகிறோம். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நல்ல டீமுடன் சன் பிக்சர்ஸ் ஆதரவுடன் மிகப்பெரிய படமாக அண்ணாத்த வந்துகொண்டிருக்கிறது” என்று உற்சாகமுடன் பேசியிருந்தார்.

இந்நிலையில் அண்ணாத்த படிப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார். ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்படும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிர்வாகம்.


Advertisement

Advertisement
[X] Close