[X] Close

விம்பிள்டன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே அதிர்ச்சித் தோல்வி

Wimbledon-2017--Andy-Murray-knocked-OUT-in-five-sets-by-Sam-Querrey

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நடப்புச் சாம்பியனான ஆன்டி முர்ரே காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி போட்டியில் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, தரநிலையில் 28-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் சாம் குவாரியை எதிர்த்து விளையாடினார். ஐந்து செட்கள் நீடித்த போட்டியில் சாம் குவாரி 3-6, 6-4, 6-7, 6-1, 6-1 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இதன்மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில், சாம்குவாரி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு விம்பிள்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீரராகவும் சாம் குவாரி உள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close