[X] Close

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவும் உள்ளூர்வாசிகள்: நெகிழ்ச்சி சம்பவங்களின் தொகுப்பு

இந்தியா,விவசாயம்,சிறப்புக் களம்

Locals-helping-to-protest-farmers-in-Delhi--collection-of-elasticity-incidents

டெல்லியின் எல்லைகளில் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு உள்ளூர்வாசிகள் உணவு, உடை, இருப்பிடத்திற்கு பல்வேறு உதவிகளை செய்யும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன.


Advertisement

image

தினமும் விடியற்காலையில் காசிப்பூர் எல்லையிலிருந்து 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வைஷாலியில் உள்ள அழகுசாதனை கடை உரிமையாளர் மீனு மற்றும் ராஜேஷ் ஷர்மாவின் குடியிருப்பினை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், தொலைபேசிகளை சார்ஜ் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். இது குறித்து பேசிய மீனு “பகலாகவோ அல்லது இரவாகவோ இருந்தாலும், விவசாயிகளுக்குத் தேவையானதை நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். நாங்களே அவ்வாறு செய்யாவிட்டால் எல்லைகளுக்கு மிக அருகில் வாழும் வேறு யார் செய்வார்கள்? ” என கூறினார்.


Advertisement

டெல்லியின் எல்லைகளில், உள்ளூர்வாசிகளுக்கும் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கும் இடையில் பல நட்புறவுகள் உள்ளன, சில குடியிருப்பாளர்கள் விவசாயிகளுக்கு பல வசதிகளை செய்துதருகின்றனர் "இந்த அரசாங்கத்தைத் தவிர எல்லோரும் எங்களைப் பற்றி அக்கறை கொண்டுள்ளனர்" என்று விவசாயி சந்தீப் சவுத்ரி கூறினார்.

காஜிப்பூரில் மயூர் விஹாரை சேர்ந்த டாக்ஸி டிரைவர் தல்வீர் சிங் , விவசாயிகள் தங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக ஒரு சக்திவாய்ந்த பவர்பேங்குடன் அந்த இடத்தை சுற்றி நடப்பதைக் காணலாம். அவர்  " விவசாயிகளால்தான் எங்கள் தட்டுகளில் உணவு இருக்கிறது, எனவே அவர்களுக்கு தேவைப்படும்போது உதவுவது எங்கள் கடமையாகும்"  என கூறினார். மேலும் இவர் வைஷாலியில் உள்ள ஒரு குருத்வாராவில் தினமும் காலையில் குறைந்தது 30 விவசாயிகளுக்கு குளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

image


Advertisement

உத்தரகாண்டை சேர்ந்த விவசாயி குர்பிரீத் அத்வால்  “அப்பகுதியில் உள்ள ஒரு பெண்மணி உங்களுக்காக நான் உணவு சமைக்கிறேன் என்று வலியுறுத்தினார். ஒருநாள் ’நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறேன்’ என்று அவர் என்னிடம் கேட்டார். நான் மாதார்-பன்னீர் என்று சொன்னேன், மறுநாள் அவர் அதை எங்களுக்காக செய்து தந்தார் ” என தெரிவித்தார்.

சோப்பு வியாபாரத்தை நடத்தி வரும் குல்தீப் சிங்,  250 பாட்டில்கள் ஷாம்பு, சோப்பு ஆகியவற்றை விவசாயிகளுக்கு கொடுத்துள்ளார். "விவசாயிகள் வீட்டை விட்டு வெளியேறும்போது இந்த பொருட்களை பேக் செய்யாததால் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் சிரமப்படுவார்கள் என்பதை நான் உணர்ந்தேன். எனக்கு சோப்பு வியாபாரம் இருப்பதால், இந்த பாட்டில்களை குறிப்பாக அவர்களுக்காக தயாரிக்க முடிவு செய்தேன்.”என்று கூறினார்.

திக்ரி எல்லையில் பல உள்ளூர்வாசிகள் முதலில் விவசாயிகளுக்காக தங்கள் வீடுகளைத் திறந்திருந்தாலும், இப்போது சில தயக்கம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் பசியானைச் சேர்ந்த விவசாயி நிஷான் சிங்  “கழிப்பறை நிலைமை ஒரு பிரச்சினை, போராடும் இடத்திற்கு அருகில் எந்த லாட்ஜ்களும், ஹோட்டல்களும் இல்லை. சில உள்ளூர்வாசிகள் முன்பு எங்களுக்கு உதவினார்கள், இருப்பினும் நாங்கள் திறந்த இடங்களுக்குச் செல்கிறோம் அல்லது கழிப்பறைகள் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளைத் தேட முயற்சிக்கிறோம். சிலர் இப்போது தங்கள் தொழிற்சாலைகளின் வாயில்களையும் பூட்டுகிறார்கள். ”  என தெரிவித்தார்.

image

பஞ்சாபின் மான்சாவைச் சேர்ந்த விவசாயி குர்னாம்  தினமும் 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு குளிக்கச் செல்வதாகக் கூறினார் “நான் டிரக் வைத்திருக்கிறேன், என் நண்பர்கள் அதில் தூங்குகிறார்கள். என்னால் இதை தினமும் வெளியே எடுக்க முடியாது. இங்குள்ள பலரும் நடைபாதையில்தான் குளிக்கிறார்கள். நான் எனது சகோதரர்களுக்கு அதிகாலை 5 மணிக்கு உணவு தயாரிக்கத் தொடங்குகிறேன், எனவே நான் ஒரு வாளி தண்ணீரில் என் டிராக்டருக்கு அருகில் குளிக்கிறேன். ஒரு கழிப்பறை வேண்டும் என்று நான் விரும்புகிறேன் " என்று மான்சாவைச் சேர்ந்த விவசாயி ஜாக்ரூப் கூறினார் .

விவசாயிகளுக்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ், டெல்லி அரசு சிங்குவில் 300 மற்றும் டிக்ரியில் 100 மொபைல் கழிப்பறைகளை அமைத்துள்ளது என தெரிவித்தார்


Advertisement

Advertisement
[X] Close