நடிகை காஜல் அகர்வாலுக்கு அண்மையில் திருமணம் நடந்த நிலையில், அவர் தற்போது புதிய ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
நடிகை காஜல் அகர்வால் கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் பேரரசுவின் இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ‘பொம்மலாட்டம்’, ‘மோதிவிளையாடு’,‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’,‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘ஜில்லா’, ‘மாரி’,‘விவேகம்’என தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தற்போது, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’வில் நடித்து வருகிறார்.
இதனிடையே நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவை கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி கரம் பிடித்தார். இவர்களது திருமணம் மும்பையிலுள்ள தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த திருமண வைபவத்தில் மணமக்களின் இருவீட்டாரும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து தனது கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்ற காஜல், தற்போது புதிய ஹாரர் காமெடி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்திற்கு ‘கோஷ்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ஜாக்பாட்’ பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘குலேபகாவலி’ படங்களை இயக்கிய எஸ். கல்யாண் இயக்க இருக்கிறார்.திருமணத்திற்கு பின்னர் முதற்படமாக காஜல் ஒப்பந்தமாகியிருக்கும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், ஊர்வசி, உள்ளிட்ட 23 காமெடி கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.எஸ் ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘குலேபகாவலி’ படத்திற்கு இசையமைத்த விவேக் மெர்வினை இசையமைப்பாளாராக்க திட்டமிடப்பட்டிருப்பாதாகச் சொல்லப்படுகிறது. கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் சென்னையில் இப்படம் தொடர்பான படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றன.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!