Published : 12,Jul 2017 02:49 AM
மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற சந்தேக கணவன்!

சென்னையில் சந்தேகத்தால் மனைவியை கொலை செய்த கணவர், தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.
நுங்கம்பாக்கம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்துவருகிறார். குடிப்பழக்கம் உள்ள சீனிவாசனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வீட்டுச்செலவுக்குக்கூட கணவர் பணம் தராத நிலையில், லட்சுமி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 3 மாதங்களுக்கு முன் சண்டை முற்றிய நிலையில், மகள் வீட்டுக்கு லட்சுமி சென்றுவிட்டார். இந்நிலையில், வீட்டு வேலைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த லட்சுமியை பின்தொடர்ந்து வந்த சீனிவாசன், மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் கத்தியால் குத்திக்கொண்டு சரிந்தார். தகவல் கிடைத்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், லட்சுமியின் உடலையும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சீனிவாசனையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.