[X] Close

குதூகலத்துடன் பனிச்சறுக்கு விளையாடும் நாய்: வைரல் வீடியோ

உலகம்

Dog-skiing-viral-video

பனிமலையில் ஸ்னோபோர்டில் அமர்ந்து நாய் ஒன்று பனியில் சறுக்கி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


Advertisement

மேலிருந்து கீழே வழுக்கிக்கொண்டே வந்து விழும் சறுக்கல் விளையாட்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் விளையாட்டு. இது விலங்குகளுக்கு மட்டும் பிடிக்காதா என்ன? இந்த சறுக்கிவிடும் விளையாட்டு பனி மலைகள் படர்ந்த நாடுகளில் எல்லாம் பனிச்சறுக்கு விளையாட்டாக விளையாடப்படுகிறது.

image


Advertisement

போட்டிகளாகாவும், உடற்பயிற்சிகளாகவும் செய்யப்படும், இவ்விளையாட்டு ஸ்வீடன், நார்வே, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரபலம். நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே விளையாட முடியும். பனி பார்க்க எவ்வளவு அழகோ, தொடுவதற்கு எவ்வளவு குளுமையோ, அதைவிட ஆபத்தானதும்கூட. பள்ளத்தாக்குகள் நிறைந்த பனி மலைகளில் பனியில் சறுக்கிக்கொண்டே செல்லும்போது விழுந்துவிடவும், பனிக்கட்டிகள் மேலே விழுந்து உறைந்துவிடும் நிலையும் ஏற்படுவதால் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

அப்படி ஆபத்தும், அழகும் நிறைந்த பனிச்சறுக்கு விளையாட்டை பயம் அறியாத நாய் ஒன்று சறுக்கி விளையாடும் வீடியோவை simon BRFC Hopkins என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், கீழே விழுந்து கிடக்கும் ஸ்னோபோர்டை வாயில் கவ்வி பனி மேட்டில் மேலே வரும் நாய், ஸ்னோபோர்டில் லாவகமாக உட்கார்ந்து சறுக்கிக்கொண்டு போவது மனதை கொள்ளை கொள்கிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி பகிர்ந்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close