ராவணனை ராமரும் சீதாவும் வென்றதைப்போல நாம் கொரோனா வைரஸை வெல்வோம் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும்14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரிட்டனில் உள்ள இந்தியர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்தியர்களுக்கு அவர் வெளியிட்ட தீபாவளி வாழ்த்து செய்தியில் "கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஓர் அசாதாரணமான சூழலை பிரிட்டன் சந்தித்து வருகிறது" என்றார்.
மேலும் "வைரஸ் பரவலை தடுப்பதற்காக தற்போது 2-ம் கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எனினும், எதிர்கால நலன் கருதி இந்தப் பொது முடக்கத்துக்கு மக்கள் தங்களின் ஆதரவை வழங்க வேண்டும். நமக்கு முன்பு ஏராளமான சவால்கள் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில், பிரிட்டன் மக்களின் தீர்க்கமான மன உறுதியாலும், அறிவுக் கூர்மையாலும் இந்த சவால்களை எளிதில் வெல்ல முடியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றார் போரிஸ் ஜான்சன்.
மேலும் " ஒளியைக் கொண்டு இருளை வெற்றி கொள்வது எப்படி, நன்மையை கொண்டு தீயவற்றை தோற்கடிப்பது எப்படி என்பதே தீபாவளி பண்டிகை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். ராமரும், சீதையும் தீயவனான ராவணனை எவ்வாறு வதம் செய்து உலகுக்கு ஒளியை பரப்பினார்களோ, அதேபோல நாமும் கொரோனா வைரஸை வெற்றி கொள்ள வேண்டும்" என தெரிவித்தார் போரிஸ் ஜான்சன்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix