Published : 08,Jul 2017 02:00 PM
சென்னையில் லஞ்சம் வாங்கும் போக்குவரத்து போலீஸ்? (வீடியோ)

சென்னை துறைமுகத்திற்குள் நுழையும் சரக்கு லாரி ஓட்டுநர்களிடம் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் லஞ்சம் வாங்குவதுபோன்ற வீடியோ வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவில் இருக்கும் போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.