குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய நபர்களின் பயணங்களுக்காக வாங்கப்பட்டுள்ள விமானம் காங்கிரஸ் ஆட்சியில் தான் ஆர்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்கான அமெரிக்காவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு போயிங் ரக விமானங்களில் ஒன்று சென்ற வாரம் இந்தியா வந்தடைந்தது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விமானம் வாங்கியதில் பல ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் வீண் செய்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், மிக மிக முக்கிய நபர்களுக்கான விமானம் வாங்க கடந்த 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்காக 2012ஆம் ஆண்டில் அப்போதிருந்த அமைச்சரவைக் குழு 10 முறை கூட்டம் நடத்தி முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!