[X] Close

சஞ்சய் தத் சட்டவிரோதமாக விடுதலையா..? மும்பை உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி

Is-Sanjay-Dutt-released-illegally-

நல்லெண்ண அடிப்படையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கான காரணத்தை 2 வாரத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புனே பகுதியைச் சேர்ந்த பிரதீப் பால்ஹர் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக விளக்கமளிக்க கோரி மும்பை நீதிமன்றம் மகாராஷ்டிரா அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இதற்கு முறையாக மகாராஷ்டிரா அரசு பதில் அளிக்காத நிலையில், இன்னும் 2 வாரங்களுக்குள் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிக்கையாக அளிக்க வேண்டும் என மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர அரசு சார்பாக அம்மாநில அட்வகேட் ஜெனரல் அஷுடோஸ் கும்பாகோனி ஆஜராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதங்களை பதுக்கி வைத்தது, தீவிரவாதிகளிடம் தொடர்பு வைத்துக்கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சஞ்சய் தத், 120 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். மேலும் நல்லெண்ண நடவடிக்கையில் அவர் தண்டனை காலத்திற்கு முன்பாகவே 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏர்வாடா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement
[X] Close