[X] Close

லடாக்கில் 1,000 சதுர கி.மீ பகுதியை ஆக்கிரமித்த சீனா?

இந்தியா

China-controls-1-000-sq--km-of-area-in-Ladakh-say-intelligence-inputs
(கோப்பு புகைப்படம்)
லடாக்கில் 1,000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதி, தற்போது சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன
 
ஏப்ரல் - மே மாதம் முதல் இந்தியா – சீனா ஆகிய இரு நாட்டு எல்லையாக உள்ள, கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஏ.சி) அருகே சீனா தனது ராணுவப் படைகளை குவித்து வருகிறது.
 
டெப்சாங் சமவெளிகளில் இருந்து சூஷூல் பகுதி வரை சீனப் படைகள் முறையாக குவிக்கப்பட்டு வருவதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார். டெப்சாங் சமவெளிகளில் பேட்ரோலிங் பாய்ண்ட் 10 முதல் பேட்ரோலிங் பாய்ண்ட் 13 வரையிலான தூரத்தில் சுமார் 900 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா கட்டுப்படுத்துவதாக இந்தியா கருதுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
image
கல்வான் பள்ளத்தாக்கில் 20 சதுர கிலோ மீட்டர், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 12 சதுர கிலோ மீட்டர், பாங்கோங் த்சோ ஏரி அருகே 65 சதுர கிலோமீட்டர், சூஷூல் அருகே 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதிகள், சீன ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதாக இந்தியா கருதுகிறது என்று அந்த அதிகாரி தி இந்துவிடம் கூறினார்.
 
 
 

Advertisement

Advertisement
[X] Close