Published : 30,Aug 2020 04:25 PM

”கோலியின் பார்மை மீட்டெடுக்க தோனி செய்த டேக்டிஸ்” வெஸ்ட் இண்டீஸ் வீரர் நெகிழ்ச்சி

Dhoni-helped-VIRAT-KOHLI-TO-restore-form-Dinesh-Ramdin

கிரிக்கெட்டில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் பார்ம் அவுட்டாவது வழக்கமான ஒன்று தான். சமயங்களில் அந்த பார்ம் அவுட் அந்த பேட்ஸ்மேனின் கிரிக்கெட் கெரியருக்கு திருப்புமுனையாக அமைந்து விடும். அது இழந்த பார்மை மீட்டெடுக்க முடியாமல் அணியிலிருந்தே விலகுவது அல்லது பார்மை மீட்டெடுத்து நெம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உருவெடுப்பது.

image

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி இரண்டாவது ரகம். 

‘கடந்த 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பார்ம் அவுட்டான கோலியை வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் இழந்த பார்மை கோலி மீட்டுக்க தோனி உதவினார்’ என தெரிவித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் ராம்டின்.

image

“இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் எங்கள் அணியோடு இந்தியா ஒருநாள் தொடரை விளையாடியது. அதில் முதல் போட்டியில் கோலியை 2 ரன்களில் வெளியேற்றினோம். அடுத்த போட்டியில் கோலியை நான்காவது பேட்ஸ்மேனாக களம் இறக்கினார் அப்போதைய கேப்டன் தோனி. அந்த போட்டியில் 62 ரன்களை குவித்தார். அடுத்ததாக மூன்றாவது போட்டி மழையினால் கைவிடப்பட்ட சூழலில் நான்காவது போட்டியில் மீண்டும் மூன்றாவது பேட்ஸ்மேனாக இறங்கி கோலி சதம் விளாசினார். அதற்கு தோனியின் ஊக்கமும் ஒரு காரணம். 

image

ஆட்டத்தில் விளையாடும் பதினோரு வீரர்களிடமிருந்து தனக்கு தேவையானதை கச்சிதமாக பெறுபவர் தோனி. 

தோனி ஒரு அற்புதமான மனிதர். தன்னை எப்போதுமே எல்லோரும் எளிமையானவராகவும், சிறந்த மனிதராகவும் எல்லோர் மனத்திலும் அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புவார்” என தனியார் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் ராம்தின். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்