[X] Close

நாயால் வந்த வினை... பறிபோனது திருநங்கை உயிர்

Transgender-suicide-in-chennai

சென்னையில் திருநங்கை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஒரு சாதாரண ‌சம்பவம், அசாதாரணமாக மாறி ‌ஒரு உயிரையே பறித்துள்ளது.


Advertisement

சென்னை வில்லிவாக்கம் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ப்ரியா என்ற திருநங்கை. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நாய், நேற்று எதிர்வீட்டுக்குள் தெரியாமல் சென்றுவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த எதிர்வீட்டு பெண்மணி வடிவுக்கரசி, நாய் மீது தண்ணீரை ஊற்றியதுடன் அதனை அடித்து விரட்டி உள்ளார். மேலும் பிரியாவையும் தகாத வார்த்தைகளால் ஆபாசமாக திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ப்ரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள பிற திருநங்கைகள் கூறும்போது, " நாங்களும் மனிதர்கள் தான். எங்களையும் சக மனிதர்களாக மதியுங்கள்" என வேதனையுடன் கூறியுள்ளனர்.


Advertisement

திருநங்கை தற்கொலை தொடர்பான புகாரின் பேரில் வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து வடிவுக்கரசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close