[X] Close

இடைவேளையின்றி களத்தில் புதிய தலைமுறை..!

Puthiyathalaimurai-jallikattu-live-without-Break

ஜல்லிக்கட்டுக்கு போராட்டக்கள நிகழ்வுகளை இடைவேளையின்றி புதிய தலைமுறை பதிவு செய்து வருகிறது.

ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் சிறிய தீப்பொறியாக அலங்காநல்லூரில் கிளம்பிய நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. அலங்காநல்லூர் போராட்டம் தொடங்கிய நாள் முதலில் இருந்து தற்போது வரை போராட்டக் குழுவினரின் உணர்வுகளை புதிய தலைமுறை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம், சென்னை மெரினா கடற்கரை மட்டுமல்லாதது கோவை வ.உ.சி மைதானம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இளைஞர்களின் போராட்டத்தை நொடிக்கு நொடி பதிவு செய்து வருகிறது புதிய தலைமுறை.


Advertisement

ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், அதற்கு போராட்டக் குழுவினரின் எதிர்வினைகளையும் உடனுக்குடன் நேரலை செய்தியில் இடைவேளையின்றி புதிய தலைமுறை வெளியிட்டு வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close