கொரோனா ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் கடைகளில் பேசப்படும் அரசியல் பேச்சுகள் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. இதில் தன்னுடைய சலூன்கடை அரசியல் பேச்சு அனுபவத்தை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். குறிப்பாக கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சலூன் கடைகளில் பேசப்படும் அரசியலை தெளிவுபடுத்துகிறார்.
அந்த செய்தியில், “கொரோனா நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு முட்டுக்கட்டைப் போட்டுவிட்டு டிஜிட்டல் தளங்களில் மட்டுமே உரையாட வைத்துவிட்டது. அதிலும் முக்கியமாக முடிவெட்டும் கடைகளில் நடக்கும் அசாத்தியமான பேச்சுக்களுக்கு. காரணம், யாரும் இப்போது பக்கத்து பக்கம் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்து பேசி, தொற்றுநோயை ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. சாதாரணமாக முடிவெட்ட கடைக்குப் போனால் அங்கு பழைய பஞ்சாங்கம் முதல் அரசியல், சினிமா மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசியர்கள்வரை எல்லாம் தெரிந்தது போன்ற காரசாரமான உரையாடல்களைக் கேட்கமுடியும். இது சொகுசு அறைகளில் சென்று முடிவெட்டும் இளைஞர்களைப் பற்றியல்ல. ’சதக்-சதக்’ என்ற சத்தத்தை ஆளுக்கு ஏற்றவாறு இசையுடன் வெட்டிக்கொண்டிருக்கும் சிறுகடைக்காரர்களுக்கும், வீட்டில் யாரிடமும் ஒத்துப்போகாத வயது வந்தவர்களுக்கும் நன்றாகவே பொருந்தும்.
திருவனந்தபுரம் அம்பலத்தரா பகுதியில் 100 சதுர அடி ரூமில், இரண்டு கலர் கண்ணாடிகளையும், இரண்டு ரோலிங் நாற்காலிகள் மற்றும் அங்கு பளபளவென இருக்கும் கருவிகளின் தொகுப்புமீது ஆர்வம்கொண்டு பலர் இங்கு வருவார்கள். இந்த கடையின் உரிமையாளர் மணியன். ஒரு காங்கிரஸ்வாதி. இலக்கிய வர்ணனையாளர். அவரைப் பொறுத்தவரை, கே, கருணாகரன் தான் எப்போதும் தலைவர். ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தவறான கட்சியில் இருக்கும் சரியான சிந்தாந்தவாதி. இ.கே.நாயனார் ஒரு பயனற்ற தேவதூதன். இந்தியாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர் ராஜீவ் காந்திதான்.
அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சலூன் கடை உரிமையாளர் ஸ்ரீகண்டன் கடை. அவர் சி.பி.எம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) உறுப்பினர் அட்டையை அணிந்திருந்தார். நிகிதா குருஷ்சேவின் தாராளக்குணத்தைப் போலவே ஸ்டானிலிசத்தை பற்றிய வரலாற்றுச் சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார். சுதந்திரம் விலைமதிப்பற்றது. அதை கவனமாக மதிப்பிடவேண்டும். அவரைப் போன்று கடை வைத்திருக்கும் மற்றவர்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் படங்களை ஒட்டி வைத்திருக்கும்போது, ஸ்ரீகண்டன் கார்ல் மார்க்ஸின் பென்சில் ஓவியத்தையும், லெனின் கலர் படத்தையும் வைத்திருந்தார். அதேபோல், தன் மனைவி கொடுத்த பிள்ளையார் சிலையையும் ஓரத்தில் வைத்திருக்கிறார்.
தொழில்துறை பயிற்சியை கைவிட்டுவிட்டு முடி திருத்தும் சலூன் கடை வைத்து நடத்திக்கொண்டிருக்கும் இளைஞர்தான் பத்ரன். இவரைப்போன்ற ஒரு இந்துத்துவ முடி திருத்துவரை பார்த்திருக்கமுடியாது. பிஜேபியை தவிர மற்ற எல்லாக் கட்சிகளுக்கும் எதிராக பேசக்கூடியவர். சகிப்புத்தன்மைதான் இந்துத்துவத்தின் முக்கிய அம்சம் என அவர் கூறுகிறார். 1980லேயே அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்படும் என தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது என பேசிக்கொண்டிருக்கிறார் இவர்.
ஹைத்ராபாத்தில் டோமல்குடாவில் இருக்கும் ஒரு முடி திருத்துபவர் சலிப்பான விஷயங்களையே பேசிக்கொண்டிருப்பார். இவர் என்.டி.ஆரை பற்றி வர்ணிப்பதிலும், மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை பற்றி பேசுவதிலும் சரியாக நேரத்தை செலவிடக்கூடியவர். இதுபோன்ற பலவிதமான பேச்சுகளையும் கருத்துக்களையும் எங்கும் கேட்கமுடிந்தது.
நமது முகக்கவசங்களுக்கு வேலை இல்லை என்ற நிலை வந்தவுடன் இதுபோன்ற இந்துத்துவமிக்க, திராவிடமிக்க, சமூக அக்கறைக்கொண்ட, வகைவகையான, விதவிதமான, தேவைக்கு அதிகமான தேவையற்ற பேச்சுக்களைக்கூட மீண்டும் கேட்கலாம். அவற்றில் பல நமக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறியுள்ளார்.
நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்