Published : 22,Jun 2017 03:41 PM
திமுக கலவரம் செய்தது குறித்து விசாரணை தேவை: பொன்.ராதாகிருஷ்ணன்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக கலவரம் செய்தது ஏன் என விசாரணை நடத்த வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கூவத்தூரில் வைத்து எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.