Published : 30,Jun 2020 09:00 PM

தடயங்கள் அழிப்பு ? - பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசியின் தந்தை கைது

Kanyakumari-Kasi-father-arrested-by-CBCIT-Police

பல பெண்களை ஏமாற்றி பாலியல் மற்றும் பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை பெண் மருத்துவர் உட்பட தமிழகம் முழுவதும் பல பெண்களை சமூக வலைதளம் வாயிலாக ஏமாற்றி பாலியல் மற்றும் பண மோசடி செய்த வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர்மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவரது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் காசியின் நண்பரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் காசி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஏதுவான சாட்சியம் மற்றும் தடயங்களை அழித்ததாக அவரது தந்தை தங்க பாண்டியனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்