தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் 1 - கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2 - தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி,
மண்டலம் 3 - விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி,
மண்டலம் 4 - நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,
மண்டலம் 5 - திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,
மண்டலம் 6 - தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தென்காசி,
மண்டலம் 7 - காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,
மண்டலம் 8 - சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி
*இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்க தடை தொடர்கிறது. இவை தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.
*அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி.
*பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் 60 % இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.
*மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இபாஸ் தேவை இல்லை. பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் இபாஸ் அவசியமில்லை.
*அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தவிர மண்டலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது.
* அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி பொது போக்குவரத்து பேருந்துகள் இயக்கப்படும்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்