[X] Close

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - மோதல் ஏற்பட்டதால் சிறைக்குச் சென்ற இளைஞர்கள்

தமிழ்நாடு

Cake-cutting-birthday-celebration---Young-people-who-went-to-jail-after-a-conflict

சீர்காழி அருகே கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியபோது மோதல் ஏற்பட்டதில் 10 பேர் காயமடைந்தனர். 

image

நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஆற்றங்கரைத் தெருவை சேர்ந்தவர் விஜய்(25). இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் சத்தம் போட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

image

உலகளவில் கொரோனா பாதிப்பு 56 லட்சத்து 78 ஆயிரமாக அதிகரிப்பு

இதனை அதேத் தெருவை சேர்ந்த சிவராஜ்(30)என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் மூண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த பெண்கள் உட்பட 10பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகார்களின் பேரில் சீர்காழி போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதன் பேரில் மோதலில் ஈடுபட்ட விஜய், அரவிந்த், சிலம்பரசன். அஜித்குமார், ஜீவா, பாலமுருகன், ராகவன், குணசேகரன், கணிவண்ணன், கார்த்திக், சதீஷ்.விமல்ராஜ்,வசந்த்,பிரபு ஆகிய 14 பேரை கைது செய்து சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ,15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close