[X] Close

"கோலியும், ரோகித் சர்மாவும் பயிற்சியை மிஸ் செய்வார்கள்" - பிசிசிஐ

விளையாட்டு

Kohli-and-Rohit-likely-to-miss-practice-says-BCCI

கொரோனா பாதிப்பு முடிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் வலைப் பயிற்சிக்குத் திரும்பினாலும் மும்பையில் இருப்பதால் அதனைக் கோலியும், ரோகித் சர்மாவும் மிஸ் செய்வார்கள் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.


Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாத இந்தியா - இலங்கை இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு என்பதால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் 50 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்படும் சூழல் இருப்பதால் கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி முகாமை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

image


Advertisement

இது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் "கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சி தொடங்கப்பட்டாலும் விராட் கோலி, ரோகிக் சர்மா உள்ளிட்ட வீரர்கள் சிலரால் நேரடியாகப் பயிற்சிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏனென்றால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மும்பையில் இருக்கின்றனர். ஆனால் நாங்கள் தொடர்ந்து ஆன்லைன் மூலமா வீரர்களிடையே தொடர்பிலிருந்து கொண்டு இருக்கிறோம்" என்றார்.

image

மேலும் தொடர்ந்த அருண் துமால் "இப்போது ஆன்லைன் மூலமாகத் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இப்போதுள்ள ஊரடங்கு குறித்துக் கவனித்து வருகிறோம். அனைத்து வீரர்களுக்கும் மைதானத்தில் நுழைந்து பயிற்சியை மேற்கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். அதற்கான சூழ்நிலை வரும்போது வீரர்கள் தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்துவர்" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close