Published : 12,May 2020 02:59 PM
20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டங்கள் : பிரதமர் மோடி அறிவிப்பு

இந்திய பொருளாதாரத்தை உயர்த்த 20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றினார் அப்போது கொரோனா பாதிப்பு மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார். ஒரு வைரஸ் உலகத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக வருந்தினார். கூடுதல் உறுதியுடன் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என தெரிவித்துக்கொண்டார்.
வைரஸ் பாதிப்பு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும் என்றார். உலகின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழல் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தியாவின் வளர்ச்சியில் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி ஐந்து முக்கிய அம்சங்களை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடிக்கு பொருளாதார திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் ஊக்கம் பெரும் எனவும் தெரிவித்தார்.