[X] Close

சென்னையில் அதிக கொரோனா பாதிப்பு ஏன்? - முதல்வர் பழனிசாமி விளக்கம்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

cm-edappadi-palaniswami-spoke-on-corona-relief-work

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.


Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசினார். அதில், சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்தார்.

முதல்வர் தமது உரையில், “அதிகமான மக்கள் நிறைந்த நகரம் சென்னை என்பதால் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. பொதுக் கழிப்பிடங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் தொற்று ஏற்படுகிறது. சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.
நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு பாராட்டியுள்ளது.


Advertisement

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாள்தோறும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஜூன் மாதத்திற்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close