Published : 30,Apr 2020 08:08 AM
கஞ்சா போதையில் தந்தை- மகனை தாக்கிய மர்ம கும்பல்

கஞ்சா போதையில் தந்தை- மகனை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை
சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அண்ணா சாலை பகுதியில் நேற்றிரவு 15-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் அந்த தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 2 ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் சென்ற அந்த கும்பல், ரவி (45) மற்றும் அவரது மகன் லோகேஷ் (21) ஆகிய இருவரையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சேர்த்தனர்.
கொடைக்கானலில் கனவாகிப்போன பருவகால சுற்றுலா... 400 கோடி இழப்பு..?
இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அந்த கும்பல் கஞ்சா போதையில் அட்டூழியம் செய்ததும், சரத் என்பவருக்கும் காயமடைந்த லோகேஷூக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததும், பழித் தீர்ப்பதற்காகவே லோகேஷ் மற்றும் அவரது தந்தையை தாக்கியதும் தெரியவந்தது. இந்நிலையில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.