[X] Close

கன்னியாகுமரியில் கொரோனாவிலிருந்து மீண்ட 77 வயது முதியவர்

மாவட்டம்,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Kanyakumari---77-year-old-man-recovered-from-Coronavirus

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த 77 வயது முதியவர் உட்பட இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.


Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். அவர்களில் தேங்காய் பட்டணம் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் கடந்த 22 ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார்.

image


Advertisement

இந்நிலையில், இன்று அவரது மனைவி மற்றும் மணிக்கட்டிபொட்டல் பகுதியைச் சேர்ந்த 77 வயது முதியவர் என 2 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவர்கள் உற்சாகமாக கைதட்டி பழங்கள் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். மேலும் 14 நாட்கள் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏர்டெல் புதிய பிரிபெய்டு ஆஃபர் : ஒரு வருடத்திற்கு 'ஹாட் ஸ்டார்' சப்ஸ்கிரைப்


Advertisement

Advertisement
[X] Close