[X] Close

மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று..!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Coronavirus-causes-2-women-who-worked-in-medicine

 


Advertisement

அரியலூர் மாவட்டத்தில் மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த மாதம் 22 ஆம் தேதி டெல்லி நிஜாமுதீன் தப்ளிக் மாநாட்டிற்கு 5 பேர் சென்று வந்தனர். இதில் செந்துறை நகரைச் சேர்ந்த ஒருவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரை ஏற்கனவே மருத்துவ குழுவினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று வீட்டிற்கு அனுப்பி வைக்கபட்டார்.


Advertisement

தமிழகத்தில் புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்..!

image

இதனையடுத்து அவரது மெடிக்கலில் வேலை பார்த்த ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் செந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் நள்ளிரவில் மருத்துவ குழுவினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement

ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை

image

இதனை தொடர்ந்து இருவரின் உறவினர்கள் பத்து பேரும் மருத்துவ பரிசோதனைக்காக செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரபட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.


Advertisement

Advertisement
[X] Close