Published : 05,Apr 2020 12:39 PM
தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா: பாதிப்பு 571 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 8 பேர் குணமடைந்துள்ளனர். 90,824 பேர் வீட்டுக் காணிப்பிலும் 127 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.
இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர். ஒருவர் துபாய் சென்று வந்தவர். இதுவரை 4612 பேருக்கு கொரோனா நோய் தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.