Published : 08,Mar 2020 04:41 PM

மாணவியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது

The-man-arrested--The-Poxo-Act

 

குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி (17) ஒருவர் 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்து. இது குறித்து அவரது பெற்றோர்கள் அந்த மாணவியிடம் கேட்டுள்ளனர். அதற்கு மாணவி, தங்களது வீட்டருகே வசித்து வரும் ராஜ்குமார் (34) என்பவர் 11 ஆம் வகுப்பு விடுமுறையின்போது குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும் அதன் பின்னர் தன்னை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

விமானத்தில் வந்த போது என் பேட்டை காணவில்லை” - ஹர்பஜன் சிங் வேதனை

image

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் இது குறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்