சென்னையில் மெட்ரோ குடிநீர் வாரிய ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடுத்த ஊரப்பாக்கம் வள்ளியம்மை தெருவைச் சேர்ந்தவர் பூபதி(45). இவர் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தில் பணியாற்றி வந்தார். பணிமுடிந்து வீட்டிற்கு வந்தபின்னர், பகுதி நேரமாக ஆட்டோவை வைத்து சொந்தமாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பூபதி தனது நண்பர்களான ஆறுமுகம், சீனு ஆகிய இருவருடன் ஆதனூர் பிரதான சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஆட்டோ மீது மோதியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கும், ஆட்டோவில் வந்த பூபதிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது.
பின்னர், பூபதி தனது நண்பர்களிடம் ஆதனூர் சாலையில் உள்ள மதுபான கடையில் மதுவாங்கி வருமாறு கூறிவிட்டு தனது ஆட்டோவில் தனியாக அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர், ஆட்டோவில் அமர்ந்திருந்த பூபதியின் கழுத்து பகுதியில் வலுவாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பூபதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது பூபதி இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பூபதியை சிகிச்சைக்காக 108 அவசர ஊர்தி மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பூபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்களை கொண்டு போலீசார் மர்ம நபரை தேடிவருகின்றனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!