Published : 13,Jan 2020 06:57 AM
“எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது” - வில்சன் மனைவி ஏஞ்சல் மேரி

எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது என சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வில்சன், பணியில் இருந்தபோது, 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று வழங்கினார். வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ. 1 கோடி நிதியை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி, “ரூ. 1 கோடி நிதி வழங்கிய முதல்வர், எனது மூத்த மகளுக்கு தகுந்த அரசு வேலை தருவதாக தெரிவித்துள்ளார். என்ன உதவி வேண்டுமானாலும் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார். என் கணவரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும். நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது” எனத் தெரிவித்தார்.
“விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள்” - எலைட் லிஸ்ட் குறித்து புஜாரா கருத்து