[X] Close

ஓபனிங்லாம் நல்லாத்தான் இருக்கு: 305 எடுத்தும் பஞ்சரானது பங்களாதேஷ்

ICC-Champions-Trophy--England-beat-Bangladesh

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, பங்களாதேஷை வீழ்த்தியது. 


Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்தும், பங்களாதேஷும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி பங்களாதேஷின் இன்னிங்சை  தமிம் இக்பாலும், சவுமியா சர்காரும் தொடங்கினர். நிதானமாக ஆடிய இவர்கள், முதல் 4 ஓவர்களில் 6 ரன் மட்டுமே எடுத்தனர். சர்கார், 28 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த இம்ருல் கேயஸ் 19 ரன்னில் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து தமிம் இக்பாலும், முஷ்பிகுர் ரஹிமும் கைகோர்த்தனர். இந்த ஜோடி, அவசரமில்லாமல் ஆடியது. தமிம் இக்பால் தனது 9-வது சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் முஷ்பிகுர் ரஹிம் அரைசதத்தை கடந்தார்.
அணியின் ஸ்கோர் 261 ரன்களாக உயர்ந்த போது இக்பால் 128 ரன் (142 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். இவரைத் தொடர்ந்து அடுத்த பந்தில் ரஹிமும் 79 ரன் (72 பந்து, 8 பவுண்டரி) காலியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பங்களாதேஷ் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. இங்கிலாந்துக்கு எதிராக பங்களாதேஷின் அதிகபட்ச ஸ்கோர் இது. இங்கிலாந்து தரப்பில் பிளங்கெட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 


Advertisement

பின்னர் ஆடிய இங்கிலாந்து, எளிதாக வெற்றிபெற்றது. அந்த அணியின், அலெக்ஸ் ஹாலெஸ் 95 ரன்னில் (86 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார்.
அடுத்து வந்த ஜோ ரூட்டும், மோர்கனும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அந்த அணி 47.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஜோ ரூட் 133 ரன்னுடனும் (129 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), மோர்கன் 75 ரன்னுடம் (61 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். ஜோ ரூட்டுக்கு இது 10-வது சதம். அவர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


Advertisement

Advertisement
[X] Close