Published : 26,May 2017 04:24 PM

இணையத்தைக் கலக்கும் போப்-ட்ரம்ப் சந்திப்பு

Pope-Francis-SLAPS-Donald-Trump-s-Hand-For-Touching-Him

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் தேவையில்லாத பல்வேறு காரணங்களுக்காக உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது என்றே கூறலாம். 

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ட்ரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸைச் சந்திப்பதற்காக ரோம் சென்றடைந்த ட்ரம்ப், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மனைவி மெலனியாவின் கையைப் பிடிக்க முயன்றபோது, அதை அவர் அலட்சியப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலானது. அதேபோன்ற நிகழ்வு போப் பிரான்சிஸை சந்தித்த போது நடந்ததாக ஒரு வீடியோ இணையத்தில் உலவவிடப்பட்டுள்ளது. அதில், போப் பிரான்சிஸின் கையைப் பிடிக்க ட்ரம்ப் முயல்வது போன்றும், அவரது கையை போப் தட்டிவிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விசாரித்ததில் போப் மற்றும் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவைப் பயன்படுத்தி போலியாக ஒரு வீடியோ உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.   
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்