[X] Close

இப்படியும் இருப்பார்களா..! கேரளாவை கண்கலங்க வைத்த பாசமலர் கதை

Tale-of-brother-sister-bond-from-Kerala-that-s-a-hit-on-social-media

தாய், தந்தை பாசத்திற்கு சற்றும் குறைவில்லாததுதான் அண்ணன் - தங்கை உறவு. தங்கைகளில் கனவுகளுக்காக எத்தனையோ அண்ணன்கள் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய உலகில் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் அண்ணன் தங்கை உறவு என்பது உண்மையில் இவை உறவுகள்தானா என்ற கேள்வியை நமக்கு எழுப்புகின்றன. 


Advertisement

எனினும் இதற்கு நடுவிலும் அத்தி பூத்தாற் போல் சில உண்மையான உறவுகளும் இருக்கதான் செய்கின்றன. அவைதான் நம்மை அவ்வபோது ஆசுவாசப்படுத்தி நம்மை புத்துயிர் கொள்ள செய்கின்றன. அப்படியான பாசமலர் கதையை தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.    

திருவனந்தபுரம் அருகில் உள்ள புளியரக்கோணம் பகுதியை சேர்ந்த தம்பதி ஹரீந்திரன் நாயர் மற்றும் ரமா தேவி. இந்த தம்பதிக்கு மனு என்ற ஆண் குழந்தையும் மீனு என்ற பெண் குழந்தையும் பிறந்தது. இதில் மீனுவிற்கு பிறவிலேயே இடுப்பிற்கு கீழ் உணர்ச்சிகள் இல்லை. அவரால் நிற்கவோ, நடக்கவோ இயலாத நிலைமை. இது மட்டுமல்லாது இதய வால்வில் கோளாறு, காது சரியாக கேட்காது என உடலில் பல பிரச்னைகள், அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்களும் கூறிவிட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அடுத்தவர்களின் உதவியை நாட வேண்டி இருந்தது. 


Advertisement

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் ஹரீந்திரன் நாயரும் இறந்து விட வறுமையில் பிடியில் சிக்கியது இவர்களது குடும்பம். இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த ரமா தேவி அப்பகுதியில் உள்ள கோயில்களில் துப்புரவு பணியாளராக சேர்ந்தார். குடும்பத்தில் தந்தை இல்லாததால் தந்தை இடத்தில் இருந்து அனைத்து கடமைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் மனு. இதனால் ஆட்டோ ஓட்டுனராக தனது வாழ்கையை மாற்றி அமைத்து கொண்டார். 

சிறு வயதில் இருந்தே தங்கை மீது அதிக பாசம் கொண்ட மனு, வெளியே குடும்பத்தோட எங்கு சென்றாலும் தங்கையை தனது இடுப்பில் தூக்கி கொள்வார். வயது இருபதை தாண்டினாலும் மற்ற இளைஞர்கள் போல் அல்லாமால் தங்கைக்காவே தனது வாழ்வை அர்பணித்து கொண்டார். 

காலங்கள் ஓடின.. மனு திருமண வயதை எட்டிய உடன் உற்றார் உறவினர்கள் காது பட பேச ஆரம்பித்தனர். ஆனாலும் மனு தனக்கு திருமணம் வேண்டாம் என்பதில்  தீர்மானமாக இருந்தார். காரணம் கேட்டால் தன்னை விட்டால் தங்கையை யார் சிறப்பாக பார்த்து கொள்வார்கள் என்று கூறி தனக்கு தங்கையின் வாழ்க்கை தான் முக்கியம் என்று திருமணம் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்தாமலே பார்த்துக் கொண்டார். 


Advertisement

இந்த சமயத்தில் தான் தான் மனுவிற்கு வரன் வந்தது. மனுவின் உண்மையான நிலையை தெரிந்து கொண்டு திருமணம் செய்ய முனவந்துள்ளார் ஒரு பெண். அவர் வேறு யாருமல்ல  திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலரான ரம்யா எனபவர். முதலில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மனு தனது தங்கையின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளார். 

இவர்கள் இருவரும் வேறு சாதிய அமைப்பை சார்ந்து இருப்பினும் இரு வீட்டாரின் சம்மதததால் திருவனந்த புரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் சமீபத்தில்  நிச்சயதார்த்தம் நடந்தது. இதனையடுத்து வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட திருவனபுரந்தவாசிகள் இந்தக் காலத்தில் இப்படி ஒரு அண்ணன் தங்கையா என மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்து கொண்டிருக்கிறது. 


Advertisement

Advertisement
[X] Close