தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜமீனாட்சி, அரசு நிதி கையாடல் தொடர்பான விசாரணையைத் திசை திருப்பும் நோக்கத்துடனேயே, தம்மீது உண்மைக்குப் புறம்பான புகார்களைத் தெரிவித்துள்ளதாக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளிதழ்கள் மூலமாக விளம்பரம் வெளியிடப்பட்டு, ஒளிவுமறைவற்ற முறையில் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி, ராஜமீனாட்சி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலராக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகள் நலனுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்ட நிதியில் இருந்து போலியான ரசீதுகள் மூலம் அரசு நிதியை கையாடியதாக, ராஜ மீனாட்சி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சரோஜா கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ராஜமீனாட்சியிடம் விசாரணை நடத்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆஜராக மருத்துவக் காரணங்களைக் கூறி, விசாரணைக்கு ஆஜராக ராஜ மீனாட்சி அவகாசம் கோரியதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தம்மை நிரந்தரப் பணியாளராக நியமித்து, சென்னைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கடந்த 7-ஆம் தேதி நேரில் சந்தித்து ராஜமீனாட்சி தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். அரசு விதிகளில் அதற்கு இடமில்லை எனக் கூறி ராஜமீனாட்சியின் கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகவும் சரோஜா குறிப்பிட்டுள்ளார். ராஜமீனாட்சியை தம்மை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுக்கவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசு நிதி கையாடல் தொடர்பான விசாரணையை திசை திருப்பவே தம்மீது உண்மைக்கு புறம்பான புகார்களை ராஜ மீனாட்சி கூறுவதாகவும் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். ராஜமீனாட்சி கூறிய அனைத்துப் புகார்களும் உண்மைக்கு புறம்பானவை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் சரோஜா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?