Published : 14,Aug 2019 04:18 PM
அத்திவரதரை தரிசித்த குமாரசாமி, தேவகவுடா

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும், அவரது தந்தையும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைருமான தேவகவுடாவும், காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்தனர்.
காஞ்சிபுரத்தில் நடந்து வரும் அத்திவரதர் தரிசனம் வரும் 16ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனால் பக்தர்கள் அனைவரும் அத்திவரதரை தரிசிப்பதற்கான கடைசி கட்ட பரபரப்பில் உள்ளனர். அதே போல், முக்கிய பிரமுகர்களும் அத்திவரதரை தரிசனத்துக்காக காஞ்சிபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, அவரது தந்தை தேவகவுடாவுடன் சிறப்பு வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, தமிழகம், கர்நாடகா இடையே நிலவும் காவரி பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்பட வேண்டும் என அத்திவரதரிடம் பிரார்த்தனை செய்ததாக கூறினார். தற்போது இரு மாநிலங்களிலும் நல்ல பெய்து வருவதால், சில மாதங்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படாது என தாம் நம்புவதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.