Published : 16,May 2017 07:14 AM
உருவாகிறது முதல்வன் 2: இயக்குவாரா ஷங்கர்?

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘முதல்வன்’. 1999-ல் வெளியான இந்தப் படம், இந்தியில் ’நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 2001ல் வெளியான இதையும் ஷங்கரே இயக்கினார். அர்ஜுன் நடித்த வேடத்தில் அணில் கபூரும் மனிஷா வேடத்தில் ராணி முகர்ஜியும் நடித்திருந்தனர். ஆனால், படம் பயங்கர ஃபிளாப்.
இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையும் ’பாகுபலி’ கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இதற்கு கதை எழுதுகிறார். ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ஆனால், இது தமிழில் உருவாகுமா? ஷங்கரே இதை இயக்குவாரா என்பது பற்றி உறுதியான தகவல் இல்லை.